சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்!
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.
மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் சர் கார்பீல்ட் சோபர்ஸ், நீண்டநாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று (ஜூலை 17) பார்படாஸில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்ததாக அவரது மகன் டேனியல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியை உலகளவில் பெருமையடையச் செய்தவரான சோபர்ஸ், 1968-ஆம் ஆண்டில் நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக கிளாமோர்கனுக்கு எதிராக போட்டியில், முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
Advertisement
Advertisement
இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, 2004-ஆம் ஆண்டு முதல், ஐசிசி ஆண்டுதோறும் தனது ஆண்டின் சிறந்த ஆண்கள் கிரிக்கெட் வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பையை வழங்கி வருகிறது.
சோபர்ஸ் தனது 90-வது பிறந்தநாளை நிறைவு செய்வதற்கு இன்னும் 10 நாள்களே இருந்த நிலையில் அவரது மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான சோபர்ஸ், 1954 ஆம் ஆண்டு மார்ச் முதல் 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 26 சதங்கள், 30 அரைசதங்களுடன் 8,032 ரன்கள் எடுத்துள்ளார்.
சோபர்ஸின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய கிரிக்கெட் வாரியம் உள்பட வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Former West Indies captain Sir Garfield Sobers (also known as Sir Gary Sobers) has died at the age of 89, as confirmed by his son Daniel. Sobers breathed his last at his residence in Barbados.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.