FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஜேடன் லெனாக்ஸ் பந்து வீச்சில் வீழ்ந்த மே.இ.தீவுகள்! தொடரில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைப் பற்றி...

Updated On : 17 ஜூலை 2026, 4:19 pm IST
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜேடன். - படம்: எக்ஸ்.
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய மூன்றாவது போட்டி கயானாவில் உள்ள புராவிடன்ஸ் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்ட்னர், மேற்கிந்தியத் தீவுகளை பேட்டிங் செய்ய அழைத்தார்.

Advertisement

Advertisement

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஜேடன் லெனாக்ஸின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்காமல் திணறியது. 37.1 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக கீசி கார்ட்டி 48 ரன்களும், அக்கீம் அகஸ்டே மற்றும் ஷிம்ரன் ஹெட்மையர் இருவரும் தலா 26 ரன்கள் எடுத்தனர். லெனாக்ஸ் 4 விக்கெட்டுகளும், சாண்ட்னர் மற்றும் மிட்செல் பிரேஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 39.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் லேதம் 31 ரன்களும், மிட்செல் 28 ரன்களும், நிக்கோலஸ் 24 ரன்களும், வில் யங் 23 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்தியத் தீவுகள் அணித் தரப்பில் லாவேஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருக்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் 4-ஆவது போட்டி பார்படாஸில் உள்ள பிரிட்ஸ்டவுனில் வருகிற ஜூலை 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

summary

West Indies collapsed from 67-1 to be all out for 140, handing New Zealand a six-wicket win in the third one-day cricket international Thursday and a 2-1 lead in the five-match series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments