முகப்பு
கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 8 ஜூலை 2026, 4:08 pm IST
மே.இ.தீவுகள் அணி. - படம்: எக்ஸ்.
பகிர்:

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 11 அன்று கயானாவில் தொடங்குகிறது. அடுத்த இரண்டு போட்டிகள் ஜூலை 13, 16 ஆகிய தேதிகளிலும், மீதமுள்ள போட்டிகள் ஜூலை 19, 21 ஆகிய தேதிகளில் பார்படாஸிலும் நடைபெற உள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அணியின் பிரதான கேப்டனாக ஷாய் ஹோப் தொடருகிறார்.

15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியில் விளையாடிய இளம் வீரர் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் விட்டல் லாவ்ஸுக்கு முதல்முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), அக்கீம் அக்ஸ்டே, ஜான் கேம்பல், கீஸி கார்ட்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டே, ஜஸ்டின் க்ரீவ்ஸ், ஆமிர் ஜாங்கோ, அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், விட்டல் லாவ்ஸ், குடகேஷ் மோத்தி, கீமோ பால், ரூதர்போர்டு, ஜேடன் ஷீல்ஸ்.

summary

West Indies have handed a maiden international call-up to 19-year-old left-arm wrist-spinner Vitel Lawes for the opening three One-Day Internationals against New Zealand national cricket team in Guyana, despite the youngster yet to play a professional match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments