FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 14) அறிவித்துள்ளது.

14 அக்டோபர் 2026, 4:15 pm IST
மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் - படம் | AP
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (அக்டோபர் 14) அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

15 பேர் கொண்ட அணியை ராஸ்டன் சேஸ் கேப்டனாக வழிநடத்துகிறார். அணியில் அறிமுக வீரராக டாப் ஆர்டர் வரிசையில் விளையாடக் கூடிய கெவின் விக்ஹம் சேர்க்கப்பட்டுள்ளார். வெள்ளைப் பந்து அணிகளுக்கான கேப்டன் சாய் ஹோப்புக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்

ராஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜோமல் வாரிக்கன் (துணைக் கேப்டன்), ஜோஷ்வா பிஷப், ஜான் கேம்பெல், சந்தர்பால், ஜோஷ்வா டா சில்வா, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவெம் ஹாட்ஜ், அமிர் ஜாங்கோ, ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், கீமோ பால், கீமர் ரோச், ஜேடன் சீல்ஸ், கெவின் விக்ஹம்.

summary

The West Indies cricket board announced the squad for the Test series against Bangladesh today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments