வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறாமலிருந்த டோனி டி ஸார்ஸி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். பேட்டர் ஸுபையர் ஹம்சாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பந்துவீச்சை பொருத்தவரையில், காயத்திலிருந்து மீண்டுள்ள வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரிச் நோர்கியா அணிக்குத் திரும்பியுள்ளார். வேகப் பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி அணியில் இடம்பெறவில்லை.
முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் வருகிற நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 வரையும், இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் வருகிற நவம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 27 வரையும் நடைபெறுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
டெம்பா பவுமா (கேப்டன்), மார்க்யூஸ் அக்கர்மேன், மேத்யூ ப்ரீட்ஸ்க், கார்பின் பாஷ், டோனி டி ஸார்ஸி, சிமோன் ஹார்மர், ஸுபையர் ஹம்சா, மார்கோ யான்சென், கேசவ் மகாராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், ஆண்ரிச் நோர்கியா, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டான்.
The South African cricket board has announced the squad for the Test series against Bangladesh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.