FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

20 வினாடிகள் முன்பு
- படம் | AP
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 429 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

100 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் வியான் முல்டர் மற்றும் ரியான் ரிக்கல்டான் இருவரும் சதம் விளாசி அசத்தினர். வியான் முல்டர் 115 ரன்கள் மற்றும் ரியான் ரிக்கல்டான் 101 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, மார்க்யூஸ் அக்கர்மேன் 62 ரன்கள், மேத்யூ பிரீட்ஸ்க் 43 ரன்கள், கேப்டன் டெம்பா பவுமா 35 ரன்கள் எடுத்தனர்.

Advertisement

Advertisement

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஜோஷ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா!

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றமளித்தனர். அணியில் அதிகபட்சமாக நாதன் லயன் 57 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேமரூன் கிரீன் 27 ரன்கள், டிராவிஸ் ஹெட் 14 ரன்கள் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் 11 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமோன் ஹார்மர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ககிசோ ரபாடா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமோன் ஹார்மருக்கு ஆட்ட நாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மார்கோ யான்சனுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

summary

South Africa secured a resounding 176-run victory against Australia in the third Test match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments