2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் ஜார்ஜ் பார்க் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 425 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் கேப்டன் டெம்பா பவுமா அதிகபட்சமாக 179 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மார்கோ யான்சென் 85 ரன்கள் மற்றும் சிமோன் ஹார்மர் 82 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலாண்ட் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மார்னஸ் லபுஷேன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
Advertisement
Advertisement
தென்னாப்பிரிக்க அணி 425 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் ஆனது. தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஃபாலோ ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவர் 190 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஸ்காட் போலாண்ட் 40 ரன்கள், மார்னஸ் லபுஷேன் 39 ரன்கள் மற்றும் அலெக்ஸ் கேரி 37* ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிமோன் ஹார்மர் இரண்டு விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசிய கேப்டன் டெம்பா பவுமாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
South Africa won the second Test against Australia by an innings and 31 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.