2-வது டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக வெற்றியை நோக்கி நகரும் பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 98 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இலங்கையைக் காட்டிலும் பாகிஸ்தான் 227 ரன்கள் என்ற வலுவான முன்னிலையை பெற்றது.
வெற்றியை நோக்கி நகரும் பாகிஸ்தான்!
Advertisement
Advertisement
227 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகபட்சமாக மிலன் ரத்நாயகே 60* ரன்களுடன் களத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, சோனல் தினுஷா 54 ரன்கள், கேப்டன் குசல் மெண்டிஸ் 53 ரன்கள், பசிந்து சூரியபந்தாரா 38 ரன்கள், தனஞ்செயா டி சில்வா 37 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அமர் ஜமால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முகமது அப்பாஸ் மற்றும் ராஸவுல்லா தலா இரண்டு விக்கெட்டுகளையும், சாக்யூப் கான் மற்றும் சல்மான் அகா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி பாகிஸ்தானைக் காட்டிலும் 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அணியிடம் கைவசம் இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே உள்ள நிலையில், இன்னும் இரண்டு நாள்கள் ஆட்டம் மீதமிருப்பதால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.