வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து டெம்பா பவுமா விலகல்!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளார்.
வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 23 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து கேப்டன் டெம்பா பவுமா விலகியுள்ளது தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
டெம்பா பவுமாவுக்குப் பதிலாக அணியில் மாற்று வீரராக செனுரான் முத்துசாமி சேர்க்கப்பட்டுள்ளார். அணியை அய்டன் மார்க்ரம் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.