FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெம்பா பவுமா 68*: 557 ரன்களுக்கு ஆட்டமிழந்த தென்னாப்பிரிக்கா!

வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

25 வினாடிகள் முன்பு
ரியான் ரிக்கெல்டன் - ககிசோ ரபாடா - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்
பகிர்:

வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தக்ஹித் ஹிரிதாய் 137, லிட்டன் தாஸ் 120 ரன்கள் குவித்தார்கள். ரபாடா 5, பேட்டர்சன் 4 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

Advertisement

Advertisement

தென்னாப்பிரிக்க அணி 124.1 ஓவர்களில் 557 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஆக்கர்மென் 157, ரியான் ரிக்கல்டென் 102 ரன்கள் குவித்தார்கள்.

ககிசோ ரபாடா பேட்டிங்கில் அசத்தி, 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெம்பா பவுமா 68 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேசம் சார்பில் ஹாசன் மஹ்முத் 4, டஸ்கின் அகமது, மெஹிதி ஹாசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 157 ரன்கள் முன்னிலை வகித்தது.

தற்போது, வங்கதேசம் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். நடப்பு சாம்பியனான அந்த அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

summary

Temba Bavuma 68*: South Africa all out for 557 runs against Bangladesh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.