ஜோஹன்ஸ்பெர்க் டெஸ்ட்டில் எதிர் தாக்குதலில் ஈடுபட்ட தெ.ஆ. பேட்டர்கள்..! நிலைகுலைந்த வங்கதேசம்!
தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பெர்க்கில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 400 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தவ்ஹித் ஹிரிதாய் 137 ரன்கள், லிட்டன்ஸ் தாஸ் 120 ரன்கள் குவித்தார்கள்.
Advertisement
Advertisement
பந்துவீச்சில் ரபாடா 5, டேனி பேட்டர்சன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்துவரும் தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் முடிவில் 62 ஓவர்களில் 287/4 ரன்கள் குவித்துள்ளது.
இந்த அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஆக்கர்மேன் 157 ரன்களும் ஜுபயர் அம்ஸா 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் களத்தில் டெம்பா பவுமா, ரியான் ரிக்கல்டன் இருந்தார்கள். வங்கதேசம் சார்பில் ஹாசன் மஹ்முத் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பிருக்கிறது.