ஆப்கனுக்கு எதிரான டெஸ்ட்: மூவர் அரைசதம்; வங்கதேசம் 317 ரன்கள் குவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் முதலில் விளையாடி வரும் வங்கதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் முதலில் விளையாடி வரும் வங்கதேசம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி அபு தாபியில் இன்று (அக்டோபர் 9) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது.
மூவர் அரைசதம்; 317 ரன்கள் குவிப்பு!
Advertisement
Advertisement
டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் வங்கதேசம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஷாத்மன் இஸ்லாம் மற்றும் தன்சித் ஹாசன் தமிம் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். தன்சித் ஹாசன் தமிம் 71 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, ஷாத்மன் இஸ்லாம் 111 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். லிட்டன் தாஸ் 53 ரன்கள், மோமினுல் ஹேக் 39 ரன்கள், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 29 ரன்கள் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி 3 விக்கெட்டுகளையும், யாமின் அகமதுஸாய் மற்றும் இஸ்மாத் ஆலம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அகமது ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
Batting first in the Test match against Afghanistan, Bangladesh has scored 317 runs for the loss of 8 wickets by the end of the first day's play.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.