வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (நவம்பர் 20) அறிவித்துள்ளது.
வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் அதன் பின் தொடங்குகின்றன.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியை கேசவ் மகாராஜ் கேப்டனாகவும், டி20 தொடருக்கான அணியை ஜோர்ன் ஃபோர்டூயின் கேப்டனகாவும் வழிநடத்தவுள்ளனர். லுங்கி இங்கிடி மற்றும் ஆண்ரிச் நோர்கியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
கேசவ் மகாராஜ் (கேப்டன்), டெவால்ட் பிரேவிஸ், கார்பின் பாஷ், ஜெரால்டு கோட்ஸீ, குயிண்டன் டி காக், டோனி டி ஸார்ஸி, ஜோர்ன் ஃபோர்டூயின், ஜோர்டான் ஹெர்மேன், டுயன் யான்சென், மோகெனா, லுஹான் டி பிரிடோரியஸ், ஆண்ரிச் நோர்கியா, லுங்கி இங்கிடி, சினெதெம்பா ஷிலே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி விவரம்
ஜோர்ன் ஃபோர்டூயின் (கேப்டன்), டெவால்ட் பிரேவிஸ், ஜெரால்டு கோட்ஸீ, கோனோர் எஸ்டர்ஹீயுசன், டோனோவன் ஃபெரைரா, ஜோர்டான் ஹெர்மேன், டுயன் யான்சென், குவெனா மபாகா, மோகெனா, பீட்டர், லுஹான் டி பிரிடோரியஸ், சினெதெம்பா ஷிலே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பிரநேளான் சுப்ராயன்.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதியும், டி20 தொடர் டிசம்பர் 10 ஆம் தேதியும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Cricket South Africa has announced the South African squad for the ODI and T20 series against Bangladesh today.