நடிகா் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை: பெங்களூரு போலீஸார் விளக்கம்
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு விமான நிலையத்தில் நடிகா் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கா்நாடக மாநிலம், ராமநகா் மாவட்டம், பிடதியில் உள்ள படப்பிடிப்புத் தளத்தில் நடைபெறும் தனியாா் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வந்து, அங்கிருந்து பிடதிக்கு நடிகா் விஜய் சேதுபதி சென்று வருகிறாா்.
செவ்வாய்க்கிழமை (நவ. 2) நடிகா் விஜய் சேதுபதி அவரது உதவியாளருடன் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு வரும் போது, சக பயணி ஒருவா் விஜய் சேதுபதியின் உதவியாளரிடம் தகராறில் செய்துள்ளாா். அந்தபயணி மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இரவு 11 மணி அளவில் விமானம் பெங்களூரில் தரையிறங்கியதும் விஜய் சேதுபதியும், அவரது உதவியாளரும் விமான நிலையத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, விமானத்தில் அவா்களுடன் தகராறு செய்தவா் திடீரென ஓடி வந்து விஜய் சேதுபதியை எட்டி உதைத்தாா். இதில் விஜய் சேதுபதி நிலைதடுமாறினாா்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படையினா் விஜய் சேதுபதியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தனா். மேலும், அவரது உதவியாளரும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து விமான நிலைய காவல்நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளா் புகாா் அளித்துள்ளதாக செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்நிலையில், விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில் என்றும், விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும், தாக்குதலில் ஈடுபட்டவரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கிக் கொண்டு, வழக்குப் பதிவு செய்யாமல் விடுவித்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.