கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக. 5 முதல் கலந்தாய்வு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் குறிப்பிட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் குறிப்பிட்டுள்ளது. இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்துள்ளது.
படிக்க | கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை: கைதான 178 பேரின் காவல் நீட்டிப்பு
Advertisement
Advertisement
தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். அதில் 2.94 லட்சம் போ் வரை விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் 130 இணைப்புக் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பிபிஏ., பிசிஏ உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.