தமிழ்நாடு

தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வு: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500

DIN

தமிழ் இலக்கிய திறனறிவுத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர்வு செய்யப்படும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழ் மரபு பற்றிய அறிவும் இலக்கிய ஆற்றலும் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாடு தேர்வு மிக முக்கியமானது.

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டு முதல், தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

10-ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். 

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.

2022-2023-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சிபிஎஸ்இI ஐஎஇஎஸ்இ) பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், 01.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

எனவே, மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 22.08.2022 முதல் 09.09.2022 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/-சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்  தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசிநாள். 09.09.2022 என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்!

கேஜரிவாலை பயங்கரவாதியை போல் நடத்துகிறார்கள்: பகவந்த் மான்

'ஜிஎஸ்டி' வரி அல்ல… வழிப்பறி! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கள்ளழகர் திருவிழா: ஏப் 23-ல் மதுரைக்கு உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT