FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தூத்துக்குடி: ஸ்பிக் - தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கி விழிப்புணா்வு

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் மற்றும் தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தேசியக் கொடி வழங்கப்பட்டது.

1 பிப்ரவரி 2024, 3:32 pm IST
தூத்துக்குடி முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடியை வழங்கிய ஸ்பிக் நிறுவன முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ்.
பகிர்:

தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனம் மற்றும் தினமணி சார்பில் 1000 மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக்கிழமை தேசியக் கொடி வழங்கப்பட்டது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர நாளையொட்டி நாடு முழுவதும் அனைவரும் தங்களது வீடுகளில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, தினமணி மற்றும் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் பயிலும் 1000 மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடி வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Advertisement

Advertisement

தூத்துக்குடி முத்தையாபுரம் கே.டி. கோசல்ராம் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் பி. பெரியசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்பிக் நிறுவன முதுநிலை மேலாளர் (நிர்வாகம்) ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேசியக் கொடியை வழங்கினார்.

ஸ்பிக் - தினமணி சார்பில் மாணவ, மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர் பேசுகையில், ராணுவத்தில் சேரும் ஆர்வம் மாணவர்களிடம் அதிகம் உள்ளது என்றும், அதுவே நம் நாட்டுக்கும், தூத்துக்குடி மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும், நாம் அனைவரும் வாழ்நாள் முழவதும் தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் ஜெயப்பிரகாஷ் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், ஸ்பிக் நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்த கௌரி, உதவி அலுவலர் குணசேகரன், கே.டி. கோசல்ராம் பள்ளி செயலர் கனகமணி, பள்ளி குழுத் தலைவர் மூ. செல்லராஜகுமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பொட்டல்காடு அரசு உயர்நிலைப் பள்ளி, தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, முள்ளக்காடு புனித அந்தோணியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 1000 பேருக்கு தேசியக் கொடி வழங்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments