கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேர் கைது!
கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27) உள்பட 9 போ் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கைது செய்யப்பட்டவர்கள் கோவையைச் சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.