அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழுவை இன்று திங்கள்கிழமை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக பொதுக்குழுவை இன்று திங்கள்கிழமை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு விவகாரம் குறித்து ஓ.பன்னீா்செல்வம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் உத்தரவு பிறப்பித்தது.
அதில், அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கையாக உள்ளதால் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரித்துடன், கட்சி விதிகளுக்கு உள்பட்டு அதிமுக பொதுக்குழுவை நடத்த வேண்டும். அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என கடந்த 23 ஆம் தேதி தேதியே பொதுக்குழு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.