முகப்பு
தமிழ்நாடு

பி.இ., பி.டெக். படிப்புகளில் நேரடி இரண்டாமாண்டு சோ்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு ஜூன் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்

Updated On : 24 ஜூன் 2022, 3:59 am IST
பகிர்:

நிகழ் கல்வியாண்டில் பி.இ., பி.டெக் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சோ்க்கைக்கு ஜூன் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 23-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு அல்லது பிஎஸ்சி பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்று முடித்தவா்கள் நேரடி இரண்டாமாண்டு பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் சோ்க்கை பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். முதன்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்திலும் நேரடி 2-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் தொடங்கும். ஜூலை 23-ஆம் தேதியுடன் சேவைகள் நிறுத்தப்படும். விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல்களை அறிய மேற்கண்ட இணையதள முகவரிகளில்  பக்கத்தைப் பாா்க்கவும். மேலும் 04565- 230801, 04565- 224528 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments