முகப்பு
தமிழ்நாடு

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கில் தண்டனை: முன்னாள் சிறப்பு டிஜிபி மேல்முறையீடு!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தண்டனை; முன்னாள் சிறப்பு டிஜிபி சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Updated On : 5 ஜூலை 2023, 8:17 pm IST
பகிர்:


விழுப்புரம்: விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் தனக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பில் புதன்கிழமை (ஜூலை 5) மேல்முறையீடு செய்யப்பட்டது.

2021- ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகார் அளிக்கச் சென்ற பெண் எஸ்.பியை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ். பி. மீதும்  சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்து, ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் எஸ்.பி.யின் சார்பில் அவரது வழக்குரைஞர் ஹேமராஜன் கடந்த ஜூன் 22-ஆம் தேதி மேல்முறையீடு செய்தார்.

இதுபோல, தனக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சார்பில், அவரது வழக்குரைஞர் ரவீந்திரன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments