முகப்பு
தமிழ்நாடு

சுகாதாரமற்ற குடிநீர்: ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து சாலைமறியல்!

மறியலில் ஈடுபட்ட மக்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

Updated On : 10 ஜூன் 2023, 12:36 pm IST
பகிர்:

மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்பு நீர் கலந்து பொதுமக்களுக்கு வழங்குவதை கண்டித்து சிறுமுகை -அன்னூர் சாலையில்   பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

மறியலில் ஈடுபட்ட மக்களை காவல் ஆய்வாளர் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் குடிநீரில் உப்பு நீர் கலந்து வருவதாக குற்றம்சாட்டியும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் சிறுமுகை-அன்னூர் சாலையில் வெள்ளி குப்பம் பளையம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

குடிநீரில் உப்பு நீர் அதிகமாக வருவதால் அதனை பொதுமக்கள் குடிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்க பட்டது.

இதனையடுத்து சிறுமுகை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

கூத்தாமன்டி பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கும் இடத்தில் ஓடை நீர் அதிக அளவில் பவானி ஆற்றில் கலப்பதால் இந்த பிரச்னை உள்ளதாக ஊராட்சி தலைவர் பேசி கொண்டு இருந்தார்.

அப்போது அங்க கூட்டத்தை கலைக்க வந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்யா திடீரென மறியலில்  ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல கூறி அங்கு கூடியிருந்த வரிகளை தாக்க முயன்றதால் பதற்றம் நிலவியது.


  
மறியலில் ஈடுபட்ட பெண்கள் காவல் ஆய்வாளர் நித்யாவை தாக்கம் முயற்சித்ததால் தொடர்ந்து பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு கூடியிருந்த சில அரசியல் பிரமுகர்கள் ஆய்வாளரை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டு பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் வர சொல்லி பொது மக்களிடம் பேசிய  ஊராட்சி தலைவர், இதற்கு உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments