FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு  பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

6 பிப்ரவரி 2024, 6:57 pm IST
  பிரேமலதா விஜயகாந்த்
பகிர்:

தேமுதிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு  பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக பிரேமலதாவை நியமித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய கட்சியின் தலைவர் விஜயகாந்தும் பங்கேற்றார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், விஜயகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற பின் பிரேமலதா, பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்டு உரையாற்றினார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர். 

இதையடுத்து தனக்கு வாழ்த்துத் தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி கூறி பொதுச் செயலாளராக தனது முதல் அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments