நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
கேளம்பாக்கம் மேகநாதீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீடு திரும்பிய நடிகர் மயில்சாமி(57) திடீா் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா். மயில்சாமி ஏற்கெனவே இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க- மேலும் 2 எம்.பி.க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள்: ஷிண்டே அணி தகவல்
Advertisement
Advertisement
மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகா்கள், பொதுமக்கள் என மயில்சாமியின் உடலுக்கு 2ஆவது நாளாக இன்றும் அஞ்சலி செலுத்தினா். மறைந்த மயில்சாமிக்கு மனைவி கீதா, மகன்கள் அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையல் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் துவங்கிய ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீர்மல்க பங்கேற்றுள்ளனர். சென்னை வடபழனி ஏவிஎம் மயானத்தில் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.