முகப்பு
தமிழ்நாடு

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஜூலை 2023, 7:47 am IST
பகிர்:

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments