தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றும் பணி தொடக்கம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகள் அகற்றுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளதாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் புதன்கிழமை தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்காக, சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
படிக்க: 500 டாஸ்மாக் கடைகள் நாளைமுதல் மூடப்படும்: தமிழக அரசு
Advertisement
Advertisement
பின்னர், சார் ஆட்சியர் கௌரவ குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
ஸ்டெர்லைட் ஆலை உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகிறது.
தற்போது ஆலையில் உள்ள ஜிப்சத்தை உடைக்கும் பணி துவங்கியுள்ளது. கழிவுகள் இன்னும் இரண்டு நாள் கழித்து வெள்ளிக்கிழமை முதல் அகற்றப்பட்டு தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படும். மேலும் பசுமை வளையத்தைப் பராமரிக்கும் பணியும் இன்று துவங்கியுள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.