செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
தொடர் மழை காரணமாக சென்னை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை காரணமாக சென்னை அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக வட மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டாரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவுடையது. நீா்மட்ட மொத்த உயரம் 24 அடி. இதன் முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி.
Advertisement
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்பொழுது நீர் இருப்பு 21.97 அடியாக உள்ளது. மேலும் ஏரிக்கும் வரும் நீரின் அளவு 142 அடியாகவும், வெளியேறும் நீரின் அளவு 160 கன அடியாகவும் உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.