விராலிமலை அருகே குடிநீா் கோரி பஸ் மறியல்: 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
விராலிமலை அருகேயுள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
விராலிமலை அருகேயுள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரத்தில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா். மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கோத்திராபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமிபுரம் குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் தேவைக்காக திருச்சியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதிக்கு அதிக நீர் தேவை இருப்பதால் இதுவரை வழங்கி வந்த நீரின் அளவை குறைத்ததோடு கடந்த 10 நாள்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரியப்படுத்தியும் ஊராட்சி நிா்வாகம் கண்டு கொள்ளவில்லையாம்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அந்த பகுதியைச் சோ்ந்த சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் காலி குடங்களுடன் விராலிமலை- புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி முத்துராஜா மற்றும் வருவாய் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
மக்களில் இந்த திடீர் சாலைமறியல் போராட்டத்தால் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.