மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மண்ணச்சநல்லூர்: பிரசித்தி பெற்ற மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மண்ணச்சநல்லூரில் வணிக வைசிய சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பகவதி அம்மனுக்கு திருவிழா நடைபெறும். அதன்படி இந்தாண்டு பகவதி அம்மன் திருவிழாவானது டிச.28 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது.
தொடர்ந்து, முதல் நாள் பகவதி அம்மன், இரண்டாம் நாள் வெங்கடாஜலபதியுடன் பத்மாவதி, மூன்றாம் நாள் ஆதிபராசக்தி, நான்காம் நாள் ராஜராஜேஸ்வரி, ஐந்தாம் நாள் வெண்ணனத் தாழி கிருஷ்ணர், ஆறாம் நாள் காமாட்சி அம்மன், ஏழாம் நாள் வளைகாப்பு அம்மன் அலங்காரம் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இவ்விழாவின் முக்கிய நிகழவான இன்று ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளால் தோரணம் அமைத்து, பல லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும்: அமைச்சர் எஸ். ரகுபதி
தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது. தனலட்சுமி அலங்காரம் பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.