முகப்பு
தமிழ்நாடு

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடினார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

Updated On : 1 மார்ச் 2024, 11:54 am IST
பகிர்:

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று தனது 71வது பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காலை 10 மணியளவில், மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து வருகிறார்.

Advertisement

Advertisement

முன்னதாக, இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளா அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பிறகு, தனது மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments