ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது பற்றி...
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி இன்று(ஜூன் 19) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,
Advertisement
Advertisement
"எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி, முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு வாழ்த்துக் கூறியிருந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்து தவெக அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. காங்கிரஸைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி கலந்துகொண்டார். வரும் தேர்தல்களிலும் தவெகவுடன் கூட்டணி தொடரும் என்றே காங்கிரஸ் கூறியுள்ளது. அதேநேரத்தில் திமுக கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
M.K. Stalin extends birthday wishes to Rahul Gandhi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.