FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க ராகுலின் தொலைபேசி அழைப்பு குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.

40 வினாடிகள் முன்பு
ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின் - ANI
பகிர்:

காங்கிரஸ் தலைவர் ராகுல், என்னுடைய உதவியாளரிடம் சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து தகவல் கொடுத்துள்ளார், நானும் சோனியாவுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சிக்கு, ராகுல் காந்தி தொலைபேசி அழைப்பு மேற்கொண்டது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் புத்தக வெளியீடு குறித்த கேள்விக்கு, நான் சோனியாவுக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கிறேன், வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடமிருந்து அழைப்பு வந்ததாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, புத்தக வெளியீடு குறித்து அழைப்பிதழ் எதுவும் வரவில்லை. ஆனால், நிகழ்ச்சி குறித்து எனது உதவியாளரை செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம், எம்.பி. ராகுல், மு.க. ஸ்டாலினை புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், ஆனால், ஸ்டாலின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றும் வெளியாகி வந்த தகவல்களுக்கு ஸ்டாலின் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

summary

Rahul's phone call! M.K. Stalin's explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.