தேசிய பத்திரிகை நாள்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து குறித்து...
தேசிய பத்திரிகை நாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகை கவுன்சில் (பிசிஐ) நிறுவப்பட்ட நவம்பா் 16-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பத்திரிகை நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை நாள் வாழ்த்துகள்! என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.