FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதல்முறையாக தன் காதலி குறித்து மனம்திறந்த ராகுல்!

ராகுல் காந்தி தனது காதலி குறித்து முதல்முறையாக பேசியது பற்றி...

ராகுல் காந்தி - PTI
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், தனது காதலி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக பேசியுள்ளார்.

‘பிலாங்கிங்: எ ஜா்னி ஆஃப் லவ்’ என்ற தலைப்பில் 526 பக்கங்கள் கொண்ட சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் கடந்த 10 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது.

Advertisement

Advertisement

இந்தப் புத்தகத்தில், சோனியா காந்தியின் இளமைப்பருவம், காதல், தனிப்பட்ட வாழ்க்கை, உடல் நலம், ராஜீவ் காந்தி, குழந்தைகள், இந்திரா காந்தி, அரசியல் வாழ்வு என பல விவகாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்புத்தகம் விற்பனைக்கு வந்த நிலையில், அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று (நவ. 16) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தனது தாய் மற்றும் தந்தையுடனான நினைவுகளைப் பகிர்ந்த ராகுல் காந்தி, முதல்முறையாக அவரது காதலி குறித்து பேசியுள்ளார்.

”ஜேம்பிரிட்ஜில் உள்ள வர்சிட்டி உணவகத்தில்தான் எனது பெற்றோர் முதன்முதலில் சந்தித்துக்கொண்ட இடம். அவர்களின் காதல் மலர்ந்த இடத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் அந்த உணவகத்துக்கு எனது அப்போதைய காதலியை அழைத்துச் சென்றேன்.

உணவகத்தில் அமர்ந்து உணவுப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, எனது பெற்றோர் இங்குதான் முதல்முறையாக சந்தித்துக் கொண்டார்கள் என்று உணவகப் பணியாளரிடம் கூறினேன்.

உடனே, அவர் என்னை பார்த்து, அந்த இருவரா? நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று பதிலளித்தார்” என்றார்.

அந்த காதலிப் பற்றி ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டவுடன், அவர் தற்போது எனக்கு நண்பர் என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

மேலும், காதலில் விழ விரும்புவோர், வார்சிட்டி உணவகத்துக்குச் செல்லுங்கள். ஆனால், சிக்கன் சாஸர் மட்டும் ஆர்டர் செய்யாதீர்கள், மிகவும் மோசமாக இருக்கும் என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

summary

Rahul opens up about his girlfriend for the first time!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.