தேர்தலுக்கு தயாராகும் தேமுதிக! பிரேமலதா சுற்றுப்பயணம்!
தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது தொடர்பாக...
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதால் போட்டி வலுத்துள்ளது. கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
அதேபோல, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம் தேதி தொடக்கி வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், முதல்கட்ட சுற்றுப்பயண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கும் பிரேமலதா, நாமக்கல், கரூர், கடலூர் என பல்வேறு மாவட்டங்களில் பயணித்து விழுப்புரத்தில் முதல்கட்ட பயணத்தை நிறைவு செய்கிறார் .
இதையும் படிக்க: அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: இபிஎஸ் திட்டவட்டம்!
DMDK General Secretary Premalatha Vijayakanth is touring Tamil Nadu ahead of the assembly elections to be held next year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.