முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
2025-26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:-
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 20.06.2025 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
விண்ணப்பப் பதிவின் கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 31) முடிவடைவதால், மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கி வரும் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாணவர்களின் முதுநிலைப் படிப்பின் நலன் கருதி, இவ்வாண்டு முதுநிலை மாணவர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவினை 01.08.2025 முதல் தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பப் பதிவு செய்யத் தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 01.08.2025 முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கு மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், 31.07.2025 வரை விண்ணப்பித்த மாணவர்களுக்குத் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும்.
பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும். சேர்க்கைகான விவரம் வாட்ஸ் ஆப் (Whatsapp) மற்றும் மின்னஞ்சல் (Email) மூலம் ஒவ்வொரு மாணவர்களுக்கு அனுப்பப்படும். முதுநிலை மாணாக்கர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் 20.08.2025 அன்று முதல் தொடங்கும்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
Higher Education Minister K. V. Cheliyan has announced that the online application registration for postgraduate courses in government arts and science colleges will be extended.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.