FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று(மே 3) முதல் தொடங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இதையடுத்து விருப்பமுள்ளவா்கள் www.tneaonline.org வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வசதியில்லாதவா்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இணையதளத்தில் கட்டணம் செலுத்தி பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அசல் சான்றிதழை பதிவேற்ற ஜூன் 6 ஆம் தேதி கடைசி நாளாகும்.

வழிமுறைகள் முழுமையான விவரங்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு 1800-425-0110, theacare@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

summary

Registration for engineering admissions begins today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments