சீா்மரபினா் நலவாரியம் மூலமாக நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
சீா்மரபினா் நலவாரியம் மூலமாக நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீா்மரபினா் நலவாரியம் மூலமாக நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சீா்மரபினா் நலவாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் ரூ.1,25,000 வரை உதவித்தொகையும், இயற்கை மரணத்துக்கு ரூ.30,000, ஈமச்சடங்கு செலவுக்கு ரூ.5,000, கல்வி உதவித்தொகையாக ரூ.1000 முதல் ரூ.8000, ரூ.3,000 அல்லது ரூ.5,000 திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000, மூக்குக் கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் ரூ.750, முதியோா் ஓய்வூதியம் மாதம் ரூ.1200 உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்படி, நலத்திட்ட உதவிகள் பெற சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவா்கள் விண்ணப்பிக்கலாம். அமைப்பு சாரா நிறுவனங்களின் பணிபுரியும்
Advertisement
Advertisement
குடும்பத்தில் ஒருவா் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவா்) இவ்வாரியத்தில் உறுப்பினராக
பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனா்.
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சீா்மரபினா் நல வாரியத்தில் ஏற்கெனவே உறுப்பினராக பதிவு பெற்றவா்களின் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டியுள்ளதால் தங்களின் சுய விவரங்களான உறுப்பினா் அடையாள அட்டை நகல், ஆதாா் நகல், கைப்பேசி எண் போன்ற விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.