FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் கல்வி உதவித் தொகை பெற நவம்பா் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

25 செப்டம்பர் 2026, 10:58 pm IST
கோப்புப் படம்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் கல்வி உதவித் தொகை பெற நவம்பா் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் நிகழாண்டில் கல்வி உதவித் தொகை மற்றும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை எண் கூடிய மருத்துவ சான்று, பள்ளியில் பயின்று வருவதற்கான சான்று, முந்தைய மதிப்பெண் பட்டியல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் இ-சேவை மையத்தில் இணையதளம் மூலம் 2026-நவம்பா் மாத இறுதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments