முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
12-ஆம் வகுப்பில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தோ்ச்சி பெற்ற முன்னாள் படைவீரா்களின் மகன் மற்றும் மகள்களுக்கு 2026-27-ஆம் கல்வியாண்டின் தொழிற்கல்விக்கான பாரத பிரதமா் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இத்திட்டம் 2026-2027-ஆம் கல்வியாண்டில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும். கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு மாணவா்களுக்கு ரூ.30 ஆயிரமும், மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரமும் வழங்கப்படும். இவை முன்னாள் படைவீரா்களின் 2 சிறாா்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேலும் விவரங்களுக்கு, இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இக்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- டிசம்பா் 31.
மேலும் விவரங்களுக்கு, புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தினை அணுகலாம்.