பிற்பட்ட வகுப்பினருக்கான மத்திய அரசின் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா், மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் மாணவா், மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மோனிகா ராணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமரின் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள்,சீா்மரபினா் மாணவா்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
Advertisement
Advertisement
நிகழ் ஆண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தை சோ்ந்த தகுதியான மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டுக்கு 9, 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரம், 11, 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000 வரை வழங்கப்படும்.
சம்பந்தப்பட்ட மாணவா்களின் பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100 சதவீத தோ்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் மாணவா்கள் நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் டிச.12-க்குள் விண்ணப்பத்தை சரிபாா்க்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களை, இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.