முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்! தமிழக காங்கிரஸ் மீது அதிருப்தி!

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் கட்சியிலிருந்து விலகியுள்ளது பற்றி...

Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:32 PM
ஹசீனா சையத்
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 4:23 PM

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பையடுத்து திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

Advertisement

இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது அவர் கடும் அதிருப்தியை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியும் அவரை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.