முகப்பு
தமிழ்நாடு

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated On : 12 ஏப்ரல் 2026, 11:33 am IST
ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்
பகிர்:

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் - தென்னக திருப்பதி, தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

Advertisement

Advertisement

அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 04ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 09ஆம் நாளான இன்று பங்குனி திருவோண நட்சத்திரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீ பொன்னப்பர் பூமிதேவி தாயார்களுடன் விசேஷ அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருள, கோயில் யானை பூமா முன்செல்ல, நாட்டிய குதிரைகள் நடனமாட, கேரள ஜெண்டை வாத்தியங்கள், நாதஸ்வர மேள தாள இசை முழங்க, ஒட்டகங்கள், மயிலாட்டம் ஆகிய கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோஷமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

summary

A large number of devotees participated in the Uppiliappan Temple chariot procession near Kumbakonam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.