முகப்பு
தமிழ்நாடு

வாக்களித்ததை விடியோ எடுத்து ரீல்ஸ் போட்டவர் கைது!

வாக்களித்ததை விடியோ எடுத்து ரீல்ஸ் போட்டவர் கைது செய்யப்பட்டது பற்றி...

Updated On : 23 ஏப்ரல் 2026, 12:40 pm IST
வாக்களித்ததை விடியோ எடுத்து ரீல்ஸ் போட்டவர் கைது - Photo: X
பகிர்:

திருப்பத்தூரில் வாக்களிப்பதை விடியோவாக பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த காலங்களைவிட அதிகளவிலானோர் வாக்களிக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதனிடையே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 128, வாக்குப்பதிவு தொடர்பான ரகசியத்தன்மை கண்டிப்பாகப் பேணப்படுவதை உறுதி செய்யும் வகையில், வாக்குச் சாவடிக்குள் செல்போன் மூலம் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மீறினால், 3 மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை, அல்லது அபராதம், அல்லது இவ்விரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், திருப்பத்தூர் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் விசில் சின்னத்துக்கு வாக்களிப்பதை விடியோவாக பதிவிட்டு, இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் விடியோ பதிவு செய்வதை சிசிடிவி காட்சி மூலம் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்திய பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

summary

Man Arrested for Filming His Vote and Posting It as a Reel!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.