முகப்பு
தமிழ்நாடு

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:42 AM
பகிர்:

கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சென்னை திரும்பினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு கடந்த 25-ஆம் தேதி வந்தார். பாம்பார்புரம் தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர், கொடைக்கானல் ஏரிச் சாலை, நகராட்சி நீர்த்தேக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டதுடன், ஏரிச் சாலைப் பகுதியில் மிதிவண்டியும் ஓட்டினார்.

4 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானலிலிருந்து காரில் மதுரைக்குப் புறப்பட்டார். அப்போது, தங்கும் விடுதி முன் கூடியிருந்த பொதுமக்கள் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையில் சென்ற போது மூஞ்சிக்கல், உகார்த்தேநகர், செண்பகனூர், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.

Advertisement

பின்னர், பகல் 12.50 மணிக்கு மதுரைக்கு வந்த முதல்வர், பிற்பகல் ஒரு மணிக்கு தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.