தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக....
சென்னையில் தங்கத்தின் விலை இன்று(ஏப். 30) காலை மாற்றமின்றி இருந்த நிலையில் மாலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்தது.
கடந்த வாரம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இடையே ஓரிரு நாள்கள் மட்டும் உயர்ந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது. நேற்று(புதன்) சவரனுக்கு ரூ. 1,600 குறைந்து ஒரு சவரன் 1,11,200-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இன்று(ஏப் 30, வியாழக்கிழமை) மாலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 200 உயர்ந்து ரூ. 14,100-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று காலை மாற்றமின்றி இருந்த நிலையில் மாலை கிலோவுக்கு ரூ. 10,000 உயர்ந்துள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
chennai live gold rate today april 30
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.