ஜூன் 18: இன்றைய தங்கம் சவரனுக்கு ரூ. 240 உயர்வு! வெள்ளி விலை குறைந்தது!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜூன் 18) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
சர்வதேச காரணங்களால் கடந்த சில நாள்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.
இந்த வாரத்தில் திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்ந்து ரூ. 1,12,560-க்கும் விற்பனையானது. செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து நேற்று (புதன்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,240-க்கு விற்பனையானது.
தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,12,480-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,060-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 குறைந்து ரூ. 2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Chennai gold and silver rate today june 18
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.