தங்கம் விலை அதிரடி சரிவு! வெள்ளி விலை? ஆக. 19 விலை நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 19) சவரனுக்கு ரூ. 680 குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக, தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து, ரூ. 14,220-க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ. 1,13,760-க்கும் விற்பனையானது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கம் கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து, ரூ.14,270-க்கும், சவரனுக்கு கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,14,160-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,14,320-க்கும் கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,290-க்கும் விற்பனையானது.
Advertisement
Advertisement
தங்கம் விலை சரிவு
இந்த நிலையில், தங்கம் விலை புதன்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
அதன்படி, கிராமுக்கு ரூ. 85 குறைந்து, ரூ.14,205-க்கும், சவரனுக்கு ரூ. 680 குறைந்து, ரூ. 1,13,640-க்கு விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதேபோன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
Today Gold and Silver rate in chennai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.