FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு தெரியுமா?

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம் தொடர்பாக....

தங்கம் விலை - படம்: IANS
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) சவரனுக்கு ரூ. 760 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதையடுத்து, தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.

சென்னையில் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ. 560-க்கு உயர்ந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை (அக். 1) கிராமுக்கு ரூ. 30 குறைந்து, ரூ.13,680-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 240 குறைந்து, ரூ.1,09,440-க்கு விற்பனையானது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 2) சவரனுக்கு ரூ. 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,10,200-க்கும் கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,775-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 245-க்கும் ஒரு கிலோ (கட்டி வெள்ளி) வெள்ளி ரூ. 5,000 உயர்ந்து, ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

The price of ornamental gold in Chennai has increased by Rs. 760 per sovereign today (Oct. 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments