இன்று தங்கம் வாங்கலாமா? விலை நிலவரம் (செப். 25)
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 25) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
மேற்காசிய போர் பதற்றம், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உலகளாவிய பொருளாதாரக் காரணிகள் உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. எனினும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 120, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 680, புதன்கிழமை சவரனுக்கு ரூ. 400 குறைந்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 25, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 1,12,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,010 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 250 -க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Today gold and silver rate in chennai and tamilnadu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.